Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

5 வயது சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் தொல்லை….. தாத்தாவின் வெறிச்செயல்….!!!!!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கட்டங்குடி என்ற கிராமத்தில் ஐந்து வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பா இடத்திற்குச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தியதில்,குழந்தையின் தாத்தா பெரியண்ணன் மற்றும் மாமா சரவணன் ஆகியோர் சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் அதற்கு சிறுமி ஒத்துழைக்காத பட்சத்தில் இருவரும் சேர்ந்து சூடான கரண்டியால் உடம்பில் பல்வேறு இடங்களில் சூடு வைத்ததும் தெரியவந்துள்ளது.

இதனால் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் பெரியண்ணன் மற்றும் சரவணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐந்து வயது சிறுமிக்கு சூடு வைத்து தாத்தா பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |