5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடுத்தவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் பெருமாள். வேன் ஓட்டுநரான இவர் 2016 ஆம் ஆண்டு 5 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் கைது செய்யப்பட்ட பெருமாள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், 1.25 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் போக்சோ சட்டத்தின் சிறப்பு நீதிபதி இந்திராணி தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பாக 3.60 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.