Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமியின் பையில் இருந்த பொருள்….. விமான நிலையத்தில் பரபரப்பு….!!!!

5 வயது சிறுமியின் பையில் தோட்டாக்கள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடகாவில் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஒருவரின் மகளின் பையில் இருந்து தோட்டாக்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த அதிகாரி பெங்களூரு செல்ல குடும்பத்துடன் வந்திருந்தார். சோதனையின் போது அலாரம் அடித்த போது அதிகாரிகள் குடும்பத்தினரை நிறுத்தி ஐந்து வயது சிறுமியின் பையை சோதனை செய்தபோது துப்பாக்கி தோட்டாகள் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களுக்கு பயண அனுமதி மறுக்கப்பட்டு விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தாங்கள் இஸ்ரேலுக்கு சுற்றுலா சென்றதாகவும், கடற்கரையில் கிடந்த இந்த தோட்டாக்களை குழந்தைக்கு விளையாடக் கொடுத்ததாகவும் அந்த அதிகாரி பதில் அளித்துள்ளார். இந்த தோட்டா வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டதாகவும், பெரிய துப்பாக்கிகளில் ‘9 மிமீ’ பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் எச்சரித்து, கூடுதல் விசாரணை நடத்துகின்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |