மராட்டியத்தின் நாகூர் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றிற்கு ஐந்து வயது சிறுமியின் உடலை தூக்கிக் கொண்டு வந்த பெற்றோர் அதன் பின் தப்பியோடி உள்ளனர். இது பற்றி விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் தாய் மற்றும் தந்தை என இரண்டு பேரும் சிறுமியை அடித்து உதைத்திருக்கின்றனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து குற்ற பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சின்மய் பண்டிட் பேசும் போது ஐந்து வயது சிறுமியின் உடலுடன் வந்த சிறுமியின் பெற்றோர் அதன் பின் தப்பி ஓடி உள்ளனர்.
நடத்தப்பட்ட விசாரணையில் பெற்றோரின் மொபைல் போனில் சிறுமியை அவர்கள் அடிக்கும் காட்சி கொண்ட சில வீடியோக்களை பார்த்தோம் என தெரிவித்துள்ளார். சிறுமியின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. பெற்றோரின் மொபைல் போனில் அவர்கள் சில சடங்குகளை செய்து அதனை வீடியோவும் பதிவு செய்து இருக்கின்றனர். அந்த காட்சிகளையும் போலீசார் கண்டறிந்து இருக்கின்றனர். அதனால் சிறுமியின் பிரேத பரிசோதனைக்கு பின்னரே மரணத்திற்கான காரணம் என்ன என்பது பற்றி தெரிய வரும். இதுவரை பெற்றோர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். மேலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.