Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுவனை….. “எட்டி உதைத்து, கைகளால் குத்தி கொடூர தாக்குதல்”….. அதிர்ச்சி வீடியோ….!!!!

பீகாரில் 5 வயது மாணவனை டியூஷன் ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. அந்த வீடியோவில் ஆசிரியர் குழந்தையை எட்டி உதைப்பதும், குத்துவதும் பதிவாகியுள்ளது. அடிபட்டதால் பலவீனமடைந்த சிறுவன், கடைசியில் மயங்கி விழுந்தான். குழந்தையின் மார்பு மற்றும் முதுகெலும்பு உட்பட குறிப்பிடத்தக்க காயங்கள் இருந்தன. குழந்தை பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.

பள்ளியின் முதல்வராக இருந்த அமர்காந்த் குமார் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்தார். அந்த டியூஷனில் இந்த சிறுவன் படித்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து தந்தையளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் அவரை கைது செய்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆகியவற்றில் எஃப் ஐ ஆர் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |