Categories
தேசிய செய்திகள்

5 வருடத்திற்கு ஒவ்வொரு மாதமும் பணம்…. போஸ்ட் ஆபீசில் கலக்கல் திட்டம்…. இணைவது எப்படி…???

பணம் என்பது தற்போது அவசியமான ஒன்றாகும். பணத்தை சம்பாதிப்பதை விட அதை எப்படி சேமிப்பது என்பதுதான் மிக முக்கியம். தற்போதைய காலத்தில் நிகழ்காலத்தில் அனைத்தையும் செலவு பண்ணிவிட்டு எதிர்காலத்தில் அவசர தேவைக்கு பணம் இல்லாத நிலை ஏற்படாமல் இருப்பதற்காக சேமிப்பு என்பது மிகவும் அவசியம். மேலும் கொரோனா வந்தபிறகு சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை பலரும் புரிந்து கொண்டுள்ளனர். இதற்கு இந்திய தபால் துறை சிறப்பான சேமிப்பு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது.

மாதாந்திர வருமானம் திட்டம்:

இந்த திட்டத்தில் வங்கியில் நிலையான வைப்பு தொகை நாம் வைப்பதை போல தபால் நிலையங்களில் மாத வருமான திட்டம் நல்ல லாபத்தை கொடுக்கும். 5 வருடங்களில் நல்ல  வருமானம் கிடைக்கிறது. இந்தத் திட்டத்துக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 6.6 சதவீதம் கிடைக்கும். இதில் அதிகபட்சமாக 4.5 லட்சம் சேமிக்கலாம்.

விதிமுறைகள் :

இந்த திட்டத்தில் 5 வருங்டகளுக்கு பணத்தை சேமிக்க முடியும்.

5 வருடங்களுக்கும் ஒவ்வொரு மாதமும் வட்டி லாபமாக கிடைக்கும்.

ஐந்து வருடங்கள் கழித்து தான் அசல் தொகை நமக்கு கிடைக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் 5 ஆண்டுகளுக்கு முன்னரே சேர்ந்து கணக்கை மூட வேண்டும் என்றால் அதற்கு அபராதம் செலுத்த நேரிடும்.

கணக்கு தொடங்கிய முதல் வருடத்திலேயே கணக்கை மூட முடியாது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது வருடத்தில் கணக்கை மூடினால் பிரின்சிபல் தொகையில் சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும்.

எப்படி கணக்கு தொடங்குவது?: 

இந்த திட்டத்தின் கணக்கை ஒரு தபால் நிலையத்தில் இருந்து இன்னும் தபால் நிலையத்திற்கு மாற்றமுடியும். எந்த ஒரு தபால் நிலையத்திலும் அதிகபட்ச முதலீட்டு வரம்புக்குட்பட்ட கணக்குகளை திறக்கலாம். கணக்கு தொடங்க நினைத்தால் பக்கத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு சென்று இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்யவேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

1.அடையாள ஆவணம்.

2.பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

3.முகவரி சான்று

4.விண்ணப்பத்தில் நாமினி பெயரை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்

Categories

Tech |