சேலம் மாவட்டத்தில் உள்ள தத்தம்பட்டி அடுத்த நாகியம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமை சேர்ந்த அர்ஜுன் என்பவர் அதே முகாமில் உள்ள ஒரு பெண்ணை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை திருமணம் செய்வதற்காக அர்ஜுன் குடும்பத்தினர் பெண் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அர்ஜுன் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துள்ளார். இதில் உடல் கருகி அர்ஜுன் அலறி துடித்ததால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து முகாமில் இருந்த மற்றவர்கள் அர்ஜுனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அர்ஜுனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.