Categories
மாநில செய்திகள்

“5 வருஷம் ஒழுங்கா படிச்சா ராசா போல வாழலாம்!”…. மாணவர்களுக்கு இன்ஸ்பெக்டர் வழங்கிய அறிவுரை….!!!!

சென்னை பூந்தமல்லி பகுதியில் பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர். அப்போது அந்த பேருந்தை நிறுத்திய இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் படியில் தொங்கி கொண்டிருந்த மாணவர்களை பேருந்தின் உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினார். மேலும் “பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டு வருடமும், கல்லூரி படிப்பு 3 வருடமும் என மொத்தம் 5 வருடங்கள் ஒழுங்காக படித்தால் வாழ்க்கையில் ராஜா போல இருக்கலாம்.

இல்லை என்றால் 50 வருடங்களுக்கு அம்போனு தான் போகணும்” என்று இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதனை கண்ட பொதுமக்கள் காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

Categories

Tech |