பிரிட்டனில் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சுமார் 5 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது .
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் தடுப்பூசிகளை அறிமுகம் செய்துள்ளது. இதில் பெரியவர்கள் முதல் 15 – 18 வயதுடைய சிறார்கள் வரை தடுப்பூசி அறிமுகமாகி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரிட்டன் சுகாதார அமைப்பு 5 வயது சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .
ஏனெனில் அந்நாட்டில் கொரோனா பரவல் வேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் நிறைந்த 5-11 வயது சிறார்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் பட்டியலில் தகுதியுடையவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இத்தடுப்பூசி நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு ,கற்றல் குறைபாடு மற்றும் சர்க்கரை நோய் போன்ற உடல் நலக் குறைபாடுகளை கொண்ட அனைத்து சிறுவர்களுக்கும் செலுத்தப்படும். மேலும் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 5 லட்சம் சிறார்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் தகுதியை பெறுவதாக பிரிட்டன் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.