நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக 5, 8 மற்றும் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். ஒத்திவைக்கப்பட்ட 12-ஆம் வகுப்பு தேர்வு சூழலை பொறுத்து பின்னர் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.