உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்தது. இதனால் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்துகிறது. இதனால் ஒடேசா நகரில் சுமார் 1.50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் கிவ் மேயர் விட்டலி கிளிப் சோவின் telegram பதிவில், ஷ்ராப்னஸ் மத்திய ஷெவ்சென்கிவ்ஸ்கி மாவட்டத்தில் இருக்கும் 5 முக்கிய நிர்வாக கட்டிடங்களை ட்ரோன் சேதப்படுத்தியுள்ளது. உயிர் சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனையடுத்து ஆளுநர் ஒலெக்சி குலேபா கிவ் மற்றும் பிராந்தியத்தின் மீது உக்கிரன் படைகள் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.