Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அடுத்தடுத்து 5 ட்விட்…. அண்ணாமலை மீது நேரடி தாக்கு… டெல்லி நடவடிக்கை ? காயத்ரி ரகுராமால் பதறும் தமிழக பாஜக ..!!

தமிழக பாஜகவில் வெளிநாட்டு தமிழர் வாழ் பிரிவு தலைவராக இருந்த காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பாஜகவில் உள்ள அதிருப்திகளை அவர் தனது ட்விட்டர் வாயிலாகவும்,  பொது வெளியிலும் கருத்துகளாக பகிர்ந்து வருகிறார். இது பெரும் பரபரப்பையை ஏற்படுத்தி, அரசியல் அரங்கில் விவாதத்தை கிளப்பி வருகின்றது.

இன்று காலை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து ஐந்து பதிவுகளை பதிவிட்டார். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை நேரடியாகவே குற்றம் சாட்டி கருத்துக்களை பகிர்ந்தது பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

1.) சூர்யா சிவா ஹனிட்ராப்பின் பண்டோரா பெட்டியைத் திறந்தார். முக்தர் அவர்கள், சூரிய சிவா சத்தியம் டிவி பேட்டியை பார்த்தேன். போலீசார் விசாரிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களை நான் கண்டிக்கிறேன். அண்ணாமலை ஜியும் மதனும் பாஜகவில் இணைந்த பிறகுதான் பாஜகவில் வீடியோ ஆடியோ கலாச்சாரம் வந்தது.

2.) மதன் மீது ஏன் புகார் இல்லை? ஆடியோ மற்றும் வீடியோவை வெளியிட அண்ணாமலை ஜி ஏன் ஒப்புக்கொண்டார்? இந்த பிரச்சினையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் தவறான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஏன் இன்னும் வீடியோக்கள் ஆடியோவை அப்படியே வைத்திருக்க வேண்டும், ஏன் அழிக்கக்கூடாது?

3.) ஆடியோ வீடியோ வெளியிடுவது வேலையா? புகார் செய்தாலும், அத்தகைய விசாரணை இல்லை. நாங்கள் அறிவுறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறோம். இது நீடித்தல் பாஜக பெயரை கெடுக்கும். பல பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். தேசிய பாஜக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.) தலைவரே பலரின் முன்னிலையில் ஒரு பெண்ணை மரியாதை இல்லாமல் குற்றம் சாட்டி, மோசமாகப் பேசுகிறார் (துபாய் குற்றச்சாட்டுகள்). அழகு இதுவா?

5.) பொறுமைக்கும் பழி சுமத்துவதற்கும் எல்லை உண்டு. சிக்கலைக் கையாள்வது மற்றும் விலகிச் செல்வது இனி வேலை செய்யாது. பெண்கள் பாதிக்கப்படுவதால் நான் குரல் கொடுப்பேன்.

Categories

Tech |