Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து 5 பசுமாடுகள் உயிரிழப்பு…!!

வயலில் மேய்ந்துகண்டிருந்த மாடுகள் உயர் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

சென்னை தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் அடுத்த மாடம்பாக்கம், நூத்தஞ்சேரி பகுதியில் இருக்கும் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடுகள் மீது திடீரென்று உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்ததில், வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த 5 பசுமாடுகளும் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. உயிரிழந்த பசு மாடுகள் குட்டியம்மாள் மோகன், வெங்கடேசன், ஏழுமலை ஆகியோருக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்தது.

பசு மாடுகள் உயிரிழந்ததற்கு மின் வாரியம் தான் காரணம், உயர் மின்னழுத்த கம்பி மிகவும் தாழ்வான நிலையில் இருப்பதாகவும், மின் கம்பம் சாய்ந்த நிலையில் இருப்பதாகவும் ஏற்கனவே மின்வாரியத்திடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காததால் மழையின் காரணமாக மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து விட்டதாக மாட்டின் உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாட்டின் உரிமையாளரகள், சேலையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

Categories

Tech |