கொரோனா தடுப்பு பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனம் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் நிதியுதவி அளிக்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். தற்போது முன்னணி மசாலா தயாரிப்பு நிறுவனமான சக்தி மசாலா 5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிய அந்நிறுவனம் வைரஸ் பரவல் தடுப்பு பணிகளில் தாங்களும் பங்கேற்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.