சிவகங்கையில் புதிதாக கட்டிய பாலம் இடிந்து விழும் அளவிற்கு சேதமானது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழக்கரையில் இருந்த ஜெட்டி பாலம் பெரிதளவில் சேதமடைந்தை தொடர்ந்து சுமார் 5 கோடியே 31 லட்சம் செலவில் புதியதாக பாலம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்ட சில மாதங்களிலேயே பாலத்தின் தரைபகுதியில் விரிசல் ஏற்ப்பட்டது. பின் சில மாதங்களிலேயே அலைகளை தடுக்கும் வண்ணம் இருந்த தடுப்பணைகளும் சேதமடைந்தன.
இவ்வாறு நாளுக்கு நாள் பாலம் பலவீனமடைந்து வர அதனை கண்ட ஊர்மக்கள் பல்வேறு துறை வாரியான அதிகாரிகளிடமும், அரசியல் கட்சித் தலைவர்களிடமும் புகார் அளித்தனர். இதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் என பலர் வந்து பார்வையிட்ட போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு நாட்கள் செல்லச் செல்ல தற்போது பாலம் பெரிய அளவில் சேதம் அடைந்து உள்ளது.
அப்பகுதியில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மீன்களை பிடித்து விட்டு பாலத்தின் கரையோரத்தில் தான் மீன்களை இறக்குவார்கள். அந்த மீன்களை ஏற்றிச் செல்ல அதிக அளவிலான வாகனங்கள் பாலத்தின் கரையோரப் பகுதிகளில் இருந்து தான் மீன்களை ஏற்றிச்செல்லும். இவ்வாறு இருக்கையில் சேதத்தைகணக்கிடும் பொழுது மிக விரைவில் பெரிய ஆபத்து ஏற்பட நேரிடும் என்பதால் அதனை விரைந்து சரி செய்திட கோரி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.