மராட்டிய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் என்ற புதிய அறிவிப்பை மாநில அரசுஅறிவித்துள்ளது.
ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், டெல்லி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்களம் போன்ற மாநிலங்களில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாள் பணி செய்யும் நடைமுறை உள்ளது.
இந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் 5 நாள் வேலை திட்டம் போல மராட்டியத்திலும் இந்த திட்டத்தை நடைமுறையை கொண்டு வர வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில், மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் பதவி ஏற்று உள்ள புதிய கூட்டணி அரசு, அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு பச்சை கொடி காட்டியது.
அதன்படி , இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி நாட்கள் என்ற அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டு உள்ளது. வரும் 29-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் அதே நேரத்தில் பணி நேரம் 30 நிமிடங்களாக அறிவித்து காலை 9.45 மணி முதல் மாலை 6.15 மணி வரை பணி நேரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.