தர்பூசணி பழம் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. கோடை காலங்களில் பெரும்பாலும் தர்பூசணி பழத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இதில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. கோடைகாலத்தில் நம் உடம்பின் உஷ்ணத்தை குறைப்பதற்காக தர்பூசணி பழத்தை சாப்பிடுகிறோம். ஆனால் வேறு சில நன்மைகள் உள்ளது.
தர்பூசணியை சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படுவதோடு, சிறுநீர்ப் பைகளில் அடைப்பு, நீர்சுருக்கு போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
ரத்த ஓட்டம் சீராக இருக்க கோடைகாலங்களில் இதனை சாப்பிடுவது அவசியம். கோடைகாலத்தில் உடலில் உள்ள நீர் வியர்வையாக வெளியேறுவதால் ரத்தத்தின் நீர்சத்து குறையும். அப்படிப்பட்ட சமயத்தில் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
கோடை காலத்தில் வெப்பம் அதிகரிப்பது, அனல் காற்று வீசுவது உடலில் உள்ள நீர்ச் சத்துக்களை எல்லாம் உறிஞ்சி எடுக்கிறது. இதனால் நாம் மிகவும் சோர்வடையும். தர்பூசணி பழத்தை சாப்பிடுவதால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது.
கோடைகாலத்தில் எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.
நரம்பு சம்பந்தமான நோய்கள் காரணமாக இளம் வயதிலேயே ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. தர்பூசணி பழத்தில் விட்டமின் சத்து அதிகம் உள்ளதால் ஆண்மை குறைபாடுகளை போக்குகிறது.
தர்பூசணி பழத்தில் வைட்டமின் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது .ந
மது உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் பல மாற்றத்தின் காரணமாக புற்றுநோய் ஏற்படுகிறது. தர்பூசணி பழங்களை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும்.
உடல் எடையை குறைப்பதில் தர்பூசணி பழம் அதிக அளவு பயன்படுகின்றது. இது நீர்ச்சத்து அதிக அளவில் உள்ளதால், இதை சாப்பிடும் போது உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து விடுகிறது.