Categories
சற்றுமுன் செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிறந்து 5 நாள் ஆச்சு …! ”விட்டு வைக்காத கொரோனா” ஷாக் ஆன தமிழகம் ….!!

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் 121 பேர் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

கள்ளக்குறிச்சியில் 3 பேரும், காஞ்சிபுரத்தில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று குணமடைந்தவர்களை பொறுத்தவரை 37 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் மொத்தமாக டிச்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1128ஆக உயர்ந்திருக்கிறது.12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பாதிப்பு என்பது நேற்று 111 ஆக இருந்த நிலையில் இன்றைக்கு அந்த எண்ணிக்கை 121 ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ...

இன்றைக்கு மட்டும் 12வயதுக்குட்பட்ட குழந்தைகள் 10 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 1 1/2 வயது பெண்குழந்தை , 8 வயது பெண் குழந்தை, 5 வயது பெண் குழந்தை, 9 வயது ஆண் குழந்தை, 8 வயது பெண் குழந்தை, 1 வயது ஆண் குழந்தை, பிறந்து 7 மாதங்கள் ஆன பிறந்து, 11 வயது ஆண் குழந்தை, 2 வயது பெண் குழந்தை மற்றும் 12 வயது பெண் குழந்தை ஆகிய 10 பன்னிரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இன்றைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதில் மிகவும் சோகமான அதிர்ச்சி தகவல் என்னவென்றால் செங்கல்பட்டில் பிறந்து 5 நாளே ஆன குழந்தைக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்த தகவல் அனைவரையும் தூக்கி வாரிபோட்டுள்ளது.

Categories

Tech |