Categories
மாநில செய்திகள்

இதுவரை நம் நாட்டில்… 5 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி..!!!

இந்தியாவில் தற்போது வரை 15 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

இதனால்  கடந்த 16-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று மாலை 6 மணிவரை நிலவரப்படி 15 லட்சத்துக்கும் அதிகமான முன்களப் பணியாளா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், நாடு தழுவிய மிகப்பெரிய கோவிட் -19 தடுப்பு மருந்து வழங்கல்  திட்டத்தின் எட்டாம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

கொரோனா தடுப்பு மருந்தை இதுவரை பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியுள்ளது. 27,776 முகாம்களில் 15,37,190 சுகாதார பணியாளர்களுக்கு இன்று மாலை 6 மணி வரை வரை தடுப்பு மருந்து வழங்கப்பட்டு உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை 6 மணி வரை 3,368 முகாம்கள் நடைபெற்றன. எட்டாம் நாளான இன்று நாடு முழுவதும் 1,46,598 சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 4,642 நபர்களுக்கு இன்று தடுப்பு மருந்து வழங்கப்பட்டது. தடுப்பு மருந்து பெற்றுக்கொண்டவர்களில் 123 பேருக்கு சிறிய அளவிலான உபாதைகள் ஏற்பட்டதாக இன்று மாலை 6 மணி வரை தெரிவிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் ஆறு நபர்கள் இறந்துள்ள நிலையில் இவர்களில் யாருடைய இறப்புக்கும் தடுப்பு மருந்து காரணமில்லை என்று தெரியவந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |