இங்கிலாந்திலும், வேல்சிலும் வசிக்கும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
பிரிட்டனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, நாட்டுமக்கள் NHS கொரோனா செயலியை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், ஜூலை 7 ஆம் தேதி வரை ஏழே நாட்களில் சுமார் 530,126 நபர்களுக்கு இச்செயலியிலிருந்து, தனிமைப்படுத்த எச்சரிக்கை தகவல் வந்திருக்கிறது.
இதில் இங்கிலாந்து மக்கள் 520,194 பேர், வேல்ஸில் வசிக்கும் மக்கள் 9,932 நபர்களுக்கும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு எச்சரிக்கை சென்றது. இதனால் தொழில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பல்வேறு நிறுவனங்கள் புகார் தெரிவித்து வருகிறது. இந்த எச்சரிக்கை பட்டியலில் பிரபல பாடகரான Ed Sheeran என்பவரும் இருக்கிறார்.