Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானுக்கு 5 லட்சம் அகதிகள் வருவார்கள்..! நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை… வெளியான முக்கிய தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் அதிகரித்தால் பாகிஸ்தானுக்கு 5 லட்சம் அகதிகள் வருவார்கள் என்று நாடாளுமன்றத்தில் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த நாள் முதல் இன்று வரை அண்டை நாடான பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் மக்கள் அகதிகளாக சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கிடையே பாகிஸ்தான் அரசு அவர்களை ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் விவரங்களை கண்காணிக்கும் குழு ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் அதிகரித்தால் பாகிஸ்தானுக்கு 5 லட்சம் அகதிகள் வருவார்கள் என்று கூறியுள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தான் விவரங்களை கண்காணிக்கும் அந்த குழு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறியதன் காரணமாக தலீபான்களின் ஆதிக்கம் அங்கு அதிகரித்து வருவதாகவும், உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த உள்நாட்டுப் போரானது ஆப்கானிய அகதிகளின் வருகை மற்றும் பயங்கரவாதத்தின் எழுச்சிக்கு வழிவகுக்கும் என்றும், பாகிஸ்தானுக்கு இது நல்லது அல்ல என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |