பிரான்ஸ் நாட்டின் இந்த வருடம் முதல் காலாண்டில் சுமார் 5,20,000 பேர் தங்கள் பணியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் சுமார் ஐந்து லட்சத்து 20 ஆயிரம் பேர் தங்கள் பணியை ராஜினாமா செய்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 4,70,000 நபர்கள் நிரந்தர பணியில் இருந்தவர்கள். கடந்த 2008 ஆம் வருடத்திலும் இதேபோன்று 5,10,000 பேர் தங்கள் பணியை ராஜினாமா செய்திருந்தார்கள்.
நிறுவனங்கள் ஊழியர் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் புதிய பணி வாய்ப்புகள் இருப்பதால் இவ்வாறு வேலையை ராஜினாமா செய்தது தெரியவந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் புதிதாக வேறு இடத்தில் பணிக்கு சேரும் ஊழியர்களுக்கு அதிகமான சம்பளம் கிடைக்கும் வாய்ப்பும் இருந்திருக்கிறது.
அதாவது, ஏற்கனவே நிறுவனங்களில் ஊழியர்கள் பாற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. எனவே புதிதாக பணிக்கு சேரும் நபர்கள் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பணியை வழங்கக்கூடிய நிலைமை நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.