Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எதுக்காக கடையை திறந்தீங்க….? விசாரணை பெயரில் நாடகம்…. 5 லட்சத்தை திருடிய போலீஸ்….!!

நகை கடையில் திருடிய 2 காவல்துறையினரை துணை போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்திலுள்ள பூக்கடை என்.எஸ்.சி போஸ் சாலையில் பிரபல நகைக்கடை ஒன்றில் இயங்கி வருகிறது. தற்போது ஊரடங்கு சமயம் என்பதால் இந்த நகை கடை திறக்கப்படவில்லை. இந்நிலையில் பூக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் சர்ஜீன் மற்றும் முஜிப் ரகுமான் என்ற இரண்டு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த நகை கடையின் கதவு பாதி திறக்கப்பட்டு இருந்ததை பார்த்து இரண்டு காவல்துறையினரும் கடைக்குள் சென்றுள்ளனர்.

அப்போது கடை ஊழியர்கள் கட்டுக்கட்டாக பணத்தை அடுக்கி வைத்துக் கொண்டிருப்பதை கண்ட காவல்துறையினர் இங்கு என்ன செய்கிறீர்கள் ஏன் கடையை திறந்து வைத்திருக்கிறீர்கள் என்று விசாரிப்பது போல பக்கத்தில் இருந்த 5 லட்ச ரூபாய் பணத்தை திருடி தங்களது பேன்ட் பாக்கெட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில் 5 லட்சம் குறைவாக இருப்பதை அறிந்த கடை ஊழியர்கள் இதுகுறித்து உடனடியாக பூக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி அவர் அந்த கடைக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது காவல்துரையினரான சர்ஜீன் மற்றும் முஜிப் ரகுமான் இருவரும் பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் போலீஸ் துணை கமிஷனர் மகேஸ்வரனிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கடையில் பணத்தை திருடிய குற்றத்திற்காக இரண்டு காவல் துறையினரையும் துணை போலீஸ் கமிஷனர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |