Categories
தேசிய செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்பை பாதுகாக்க 5 சிங்கவால் குரங்குகள்..!!

அமெரிக்க அதிபர் டிரம்பை பாதுகாக்க தாஜ்மகாலில் 5 சிங்கவால் குரங்குகளை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக தனி விமானம் மூலம் அரசு முறை பயணமாக நேற்று அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மதியம் 12 மணியளவில் வந்து இறங்கினார். அவருடன் மனைவி மெலனியா, மகள் இவான்கா ஆகியோரும் வந்துள்ளனர். விமான நிலையத்தில் இந்திய பிரதர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கைகுலுக்கி ஆரத்தழுவி வரவேற்றார். மேலும் டிரம்ப் மனைவி மற்றும் மகளுக்கும் கைகுலுக்கி வரவேற்றார் மோடி.

Image

அதை தொடர்ந்து விமான நிலையத்தில் குஜராத் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து இரு நாட்டு தலைவர்களும் சபர்மதி ஆசிரமத்திற்கு புறப்பட்டு சென்றனர். இரு நாட்டு தலைவர்கள் செல்லும் வழிநெடுகிலும் லட்சக்கணக்காக மக்கள் வரவேற்றனர். சபர்மதி ஆசிரமத்திற்கு வந்ததும் அதிபர் டிரம்ப் மற்றும் மனைவி மெலனியா இருவரும் சுற்றி பார்த்தனர்.

Image

அதன் பின் அகமதாபாத்தின் மொடீரா மைதானத்தில் நடைபெறும் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் கலந்து கலந்து கொண்டு அந்த மைதானத்தை திறந்து வைக்கிறார். பின்னர் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு மரியாதை அளிக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது. இதில் அதிபர் டிரம்ப் 1.10 லட்சம் மக்கள் முன்னிலையில் உரையாற்றுகிறார். அதை தொடர்ந்து ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை சுற்றி பார்க்க செல்கிறார் அதிபர் டிரம்ப். முன்னதாக அகமதாபாத் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தாஜ்மகாலிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அவரது குடும்பத்தை பாதுகாக்க மட்டுமே தனி அமெரிக்க ரகசிய உளவுத்துறை நியமிக்கப்பட்டுள்ளது. தாஜ்மகாலில் குரங்குகள் நடமாட்டம் அதிகம்  என்பதால் தலைவர்களை பாதுகாக்க அங்கு 5 சிங்கவால் குரங்குகளை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் பயன்படுத்த இருக்கின்றனர். ஏனென்றால் சிங்க வால் குரங்குகளை கண்டால் சாதாரண குரங்குகள் வராது என்பதற்காக  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

Categories

Tech |