புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளி 5 மணி நேரம் ஆகியும் மருத்துவர்கள் வராததால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பூங்கா நகரைச் சேர்ந்தவர் ராமானுஜம், ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர் மூச்சுத்திணறல் காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 மணி நேரத்திற்கும் மேலாகியும் எந்த மருத்துவரும் வந்து பார்க்காததால் கடும் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு ராமானுஜம் பரிதாபமாக உயிர் இழந்தார், உரிய நேரத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்திருந்தால் தந்தையை காப்பாற்றியிருக்க முடியும் என்று ராமானுஜத்தின் மகன்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.