கொரோனா ஊரடங்கு காரணமாக ஐந்து மாத காலமாக வருமானமின்றி வாடி வரும் நாட்டுப்புறக் கலைஞர்கள் சுதந்திர தின விழாவில் வாய்ப்பு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட நாட்டுப்புற இசைக் கலைஞர்கள், நாடக நடிகர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கோயில் திருவிழாக்கள் போன்ற சடங்குகள் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானம் அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது தற்போது கொரோனா காரணமாக, கடந்த ஐந்து மாத காலமாக அவர்கள் வருமானமின்றி வறுமையில் வாடி வருகின்றனர் நலவாரியம் மூலம் அனைவருக்கும் நிவாரண நிதி வழங்கப்படாமல் குளறுபடி நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டும் நாட்டுப்புற கலைஞர்கள். சிறப்பு நிவாரணமாக 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் சுதந்திர தின விழாவில் கலை நிகழ்ச்சிகளில் தங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.