நடிகர் அர்ஜூனின் மருமகனும், பிரபல நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். அப்போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். அவரின் மனைவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஜூனியர் சிரஞ்சீவி சர்ஜா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் குழந்தையின் புகைப்படத்தை காதலர் தினத்தன்று மேக்னா வெளியிட்டார்.
குழந்தை அப்படியே சிரஞ்சீவி சர்ஜா போல இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் மரணத்திற்கு முன்பு தான் கணவர் கடைசியாக நடித்த ராஜ மார்த்தாண்ட படத்தின் டீஸரை தனது மகன் கையால் வெளியிட்டார். மேக்னா. குட்டி சிரஞ்சீவி சர்ஜா வெளியிட்ட அந்த டிரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது