தமிழகத்தில் 4ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு இன்று முதல் அமுலாக்கியதை தொடர்ந்து பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படுகின்றது.
கொரோனா பெருந்தொற்று பரவியதை அடுத்து தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் ஊரடங்கு நான்காம் கட்ட தளர்வு அறிவிக்கப்பட்டதில், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. சென்னையில் போக்குவரத்து இயங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வரப்பட்டன. போக்குவரத்து இயக்கத்திற்க்கான வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. அதில்,
சென்னை போக்குவரத்து கழகம் சார்பில் 3000 பேருந்துகள், 100 சதவீத போக்குவரத்து ஊழியர்களுடன் இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் மேலும் கூடுதலாக போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்திலும் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேர் அமரும் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் பின்பக்கம் வழியாக பேருந்தில் ஏறும் போது கிருமிநாசினி வழங்கப்படும். பயணம் முடிந்து முன்பக்கமாக இறங்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது. பேருந்தின் ஒவ்வொரு நடை முடியும் இறுதியில் பேருந்து முழுமையாக கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இருக்காது எனவும், பேருந்து பாஸ் பெற்று குறைந்த குறைந்த அளவிலேயே பயணம் மேற்கொள்ளவும் வசதி செய்யப்பட்டதாக வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.