Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா…. மஹாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 1,386ஆக உயர்வு!

மகாராஷ்டிராவில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 1386ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்தியாவையும் இந்த வைரஸானது விட்டு வைக்கவில்லை. கொரோனாவின் தாக்கம் முதலில் கேரளாவில் தொடங்கிய நிலையில் பின்னர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவியது.

தற்போதைய நிலவரப்படி நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனாவின் பாதிப்பு மிக அ திகமாக உள்ளது. மொத்தம் 1364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் 25 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 97ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று மகாராஷ்டிராவின் தாராவி பகுதியில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அதில் 2 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஏற்கனவே ராஜீவ் ராஜீவ் விளையாட்டு வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இப்போது பிரஹன் மும்பை மாநகராட்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனால் தாராவியில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 1386ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |