Categories
தேசிய செய்திகள்

5 நாட்களில் 5 பெண்கள் பாலியல் வன்கொடுமை…!!

உத்தரபிரதேசத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பதற்றம் நிலவுகிறது.

உத்திரபிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டம் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை 4 பேர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்தும், நாக்கை துண்டித்து, முதுகுத் தண்டுவடத்தை கடுமையாகத் தாக்கியும், சித்ரவதை செய்தனர். இந்தப் பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் பரிதாபமாக மரணமடைந்தார். பெற்றோரைக் கூட அனுமதிக்காமல் இளம் பெண்ணின் சடலத்தை உத்தரபிரதேச போலீசாரே எரித்தனர்.

தொடர்ந்து அந்த கிராமத்தை போலீஸ்  சுற்றி வளைத்து தடுத்து வைத்துள்ளது. இந்த கொடுமையின் துயர் தனிவதற்குள் உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் பகுதியில் 22 வயதான இளம் பெண் ஒருவர் சமூக விரோதிகளால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கை கால்கள் துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் வேறு ஒரு மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு தலை கற்களால் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். முசாஃபர்நகர் ஒட்டிய கிராமப்பகுதியில் வயல்வெளியில் துப்பாக்கி முனையில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். மற்றொரு சம்பவத்தில் பார்வை இழந்த பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு உள்ளார்.

இதுபோல் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை தொடர்ந்து ஆறுதல் தெரிவிக்க சென்ற காங்கிரஸ் சமாஜ்வாதி கட்சி ராஷ்டிரிய லோக்தளம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உத்தரபிரதேச போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இந்நிலையில்  உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டுமென அரசியல் கட்சியினர் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |