Categories
உலக செய்திகள்

5 நாளில் இவ்ளோவா…. தடுப்பூசி போடுவதில் புதிய சாதனை…. பிரபல நாடு வெளியிட்ட தகவல் ….!!!

கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 10 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள்  செலுத்தப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் முதல் முதலாக கண்டுபிடிக்கபட்ட கொரோனா  வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவில் கொரோனா  தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . ஆனால் அங்கு  உள்நாட்டு  நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை  தவிர மற்ற தடுப்பூசிகளுக்கு அனுமதி இல்லை. மேலும் தற்போது 4 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் 3 தடுப்பூசிகள் மட்டும் அவசர காலங்களில் பயன்படுத்தப்படுகிறது .

இதுவரை சுமார் 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு  புதிய சாதனையை படைத்திருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை உலக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கைகளில் 3-ல்  ஒரு பங்கு ஆகும். கடந்த 5 நாட்களில் மட்டும் 10 கோடி கொரோனா  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. ஆனால் மற்ற நாடுகளை விட  அங்கு தாமதமாகவே கொரோனா  தடுப்பூசி போடும்  பணிகள் தொடங்கப்பட்டது. ஏனெனில் தடுப்பூசியில்  வெளிப்படைத்தன்மை இல்லாதது மற்றும்  தடுப்பூசி முறைகேடு ஆகியவற்றால் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வந்தனர்.

அதன்பிறகு கடந்த ஒரு  மாத காலத்தில்  தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் அங்குள்ள 140 கோடி மொத்த மக்கள் தொகையில்  70 சதவீத மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதார ஆணையத்தின் துணைத் தலைவரான  செங்க் இக்சின்  தெரிவித்துள்ளார். இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட  வெளிநாட்டு மக்களுக்கு  தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக  சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |