தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் இந்தோனோசியாவில் இருந்து சுற்றுலா வந்தவர்கள். ஒருவர் அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் கடந்த 22ம் தேதி முதல் சேலம் மருத்துவ கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர்களின் ரத்த மாதிரிகள் சென்னைக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டதில் 5 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
#update: 5 news cases of #COVID19 in TN. 4 Indonesian nationals & their travel guide from Chennai test positive at #Salem Medical College. Quarantined since 22.3.20 @MoHFW_INDIA @CMOTamilNadu #vijayabaskar
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 25, 2020
இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் 15,492 பேர் கண்காணிப்பில் உள்ளனர். 2.9 லட்ச பயணிகளுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா ? என பரிசோதிக்கப்பட்டது. இதுவரை 890 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டதில் 757 பேருக்கு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது. கொரோனா அறிகுறியுடன் இருந்த 110 பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு முடிவுக்கு காத்திருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.