Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்து 5 பேர் பலி…திருவண்ணாமலை அருகே சோகம்…!!

காஞ்சி அருகே தனியார் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் கிணற்றை தூர்வாரிவிட்டு ஏறிய போது இரும்பு வடம் முறிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சியை  அடுத்த ஆலாத்தூர் தனியார் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள்  தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தன. 70 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில், கிரேன் உதவியுடன் பெரிய மரப்பெட்டி மூலம் அப்பணியாளர்கள் கிணற்றுக்குள் இறங்கி பாறைகளைத் தகர்க்க வெடிகளைப் பொருத்தியுள்ளனர். பாறைகளை தகர்க்க வெடிகளைப் பொருத்திவிட்டு மேலே ஏறும்போது அந்த மரப்பெட்டியை தாங்கிப் பிடித்திருந்த இரும்பு வடம் எதிர்பாராதவிதமாக முறிந்து அப்பணியாளர்கள் 6 பேரும் கிணற்றிற்குள் விழுந்துள்ளனர். அதில் சம்பவ இடத்திலையே  5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்தது தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஐந்து பேரின்  உடல்களையும் மீட்டனர். உயிரிழந்தவர்களின்  உடல்களை திருவண்ணாமலை – காஞ்சி சாலையில் கிடத்தி அவர்களின் உறவினர்கள் மறியலில்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சம்மந்தப்பட்ட தனியார் பள்ளிக்குச் சொந்தமான பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து உடைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.அப்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் தலா 2 லட்ச ரூபாய் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதையடுத்து  மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Categories

Tech |