கோவையில் கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தற்போது வரை 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல 8 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மேலும் 5 பேர் குணமடைந்துள்ளார்கள் என்ற செய்தி தமிழக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் கொரோனா பாதித்த 63 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் முதலாவதாக அனுமதிக்கப்பட்ட 25 வயது மாணவி இவர் பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தார். மருத்துவர், அவரது 10 மாத குழந்தை, பெண் மருத்துவரின் தாய், பணிப்பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 5 பேருக்கும் தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது அவர்கள் 5 பேரும் குணம் அடைந்து இருக்கிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். தற்போது ஆம்புலன்ஸ் மூலமாக அவர்கள் தற்போது வீடு திரும்புகிறார்கள். மேலும் 58 பேர் கோவையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது.