Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

5 பேர் நில்லுங்க…! ”15 நிமிடம் இருங்க” திமுக கூட்டணி பரபரப்பு அறிக்கை …!!

மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை பொது மக்கள் கருப்பு சின்னம் அணியவேண்டும் என திமுக கூட்டணி தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் சென்னையை தவிர பிற பகுதிகளில் நாளை முதல் மதுபானக்கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவிதது. அரசின் இந்த உத்தரவு தமிழக மக்களை கடும் அதிர்ச்சியடைவாய்த்தது. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன. திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டணி தலைவர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை பொதுமக்கள் கருப்பு சின்னம் அணிந்து நிற்கவேண்டும் என்ற வேண்டுகோள்ளை தமிழக மக்களுக்கு அவர்கள் விடுத்திருக்கின்றார்கள். நாளை காலை வீட்டின் முன்பு 5 பேருக்கு மிகாமல் 15 நிமிடங்களுக்கு கருப்பு சின்னம் அணிந்து நின்று எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இதனால் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் திமுக கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |