களக்காடு பகுதியில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவி வரும் காரணத்தினால் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டரான கார்த்திகேயன் மற்றும் காவல்துறையினர் வடமலைசமுத்திரம், சம்மன்குளம் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு இருக்கும் மரத்தடியில் முத்துசாமி, சுப்பிரமணியன், அருணாச்சலம், வெங்கடேஷ் மற்றும் முத்துராமன் ஆகிய 5 பேரும் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் 5 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்து 250 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.