தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற 2 மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூலசமுத்திரம் பகுதியில் பத்மா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பத்மா அவரின் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் பத்மாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். அப்போது பயத்தில் பத்மா சத்தம் போட்டு கத்தியதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதில் பறிபோன தங்கச் சங்கிலியின் மதிப்பானது ஒரு லட்சத்து 75 ஆயிரம் என தெரியவந்துள்ளது. இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.