Categories
பல்சுவை

சாம்சங் கேலக்ஸி A71, கேலக்ஸி A51 அசத்தலாக இருப்பதற்கான 5 காரணங்கள்..!

நமது அன்றாட தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்கள் நாளுக்கு நாள் அசத்தலாகிக் கொண்டு வருகின்றன. தற்போதைய சூழலில் புதிய வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப நமது அத்தனைத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலும் பட்ஜெட் விலையிலும் உள்ள ஸ்மார்ட் போன் அத்தியாவசியம் ஆகிறது.

தற்போது சாம்சங் நிறுவனம், தனது புதிய ஸ்மார்ட்போனின் அசத்தல் அம்சங்களை அனைத்து நிலை மக்களுக்கும் கொண்டு செல்லும் நோக்கில் உலகளவில் கேலக்ஸி A71 மற்றும் A51 ஆகிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மிகப்பெரிய டிஸ்ப்ளே அம்சம் முதல் அதிகத் திறன் வாய்ந்த உட்கட்டமைப்புகளையும் இந்த ஸ்மார்ட் போன்கள் கொண்டுள்ளன. பட்ஜெட் விலையில் கவரும் வகையிலான அம்சங்கள் நிறைந்ததாக இந்த ஸ்மார்ட் போன்கள் உள்ளன. சாம்சங், தனது பிரபலமான கேலக்ஸி S20 சீரிஸ் போன்களில் காணப்படும் முக்கிய அம்சங்களையும் கேலக்ஸி A71 மற்றும் A51 போன்களில் அறிமுகம் செய்துள்ளது.

அசத்தும் கேமரா:

ஸ்மார்ட் போன்களில் அதிகம் பயன்படுத்தப்படும் அம்சமாக கேமரா உள்ளது. நமது அன்றாட வாழ்க்கையைப் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவதிலிருந்து முக்கிய கோப்புகளை ஸ்கேன்  செய்து வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு அனுப்பும் வகையில் அத்தனையும் சாத்தியப்படுகிறது. தேவைகள் அதிகமாகும் காலகட்டத்தில் புதிய கேமரா அம்சங்கள் உடனான ஸ்மார்ட் போன்களுக்கான தேவையும் அதிகமாகிறது.

சாம்சங் நிறுவனத்தில் மிகவும் வரவேற்புப் பெற்ற பிரபலமான கேலக்ஸி S20 சீரிஸில் இடம் பெற்றுள்ள அதே கேமரா திறன், புதிய கேலக்ஸி A71 மற்றும் A51 போன்களிலும் இடம் பெற்றுள்ளது. உங்களது மொபைல் போன் மூலமாகவே அதிதிறன் சென்சார் மூலம் அழகான புகைப்படங்களை எடுக்க முடியும். புகைப்படங்கள் என்றாலும் வீடியோ என்றாலும் மிகவும் தெளிவாக நுணுக்கமாக உங்களது சிறப்பு நிகழ்வுகளைப் பதிய இந்த சென்சார்கள் உதவுகின்றன.

இப்புதிய அம்சங்கள் மூலம் ஒரு விரைவு வீடியோவை உங்களால் மிகவும் அசாத்தியமாக எடுக்க முடியும். சிறப்புத் திறன் வாய்ந்த மென்பொருள் அம்சங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கேலக்ஸி A சீரிஸ் போன்களின் வெளிப்புறக் கட்டமைப்பும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. குறைவான முயற்சியில் நிறைவான புகைப்படங்களை இந்த கேலக்ஸி A சீரிஸ் போன்கள் மூலம் உங்களால் எடுக்க முடியும்.

உங்களது சிறப்பான தருணங்களை பாதுகாக்க:

உங்களது சிறப்பான தருணங்களின் சிறந்த பகுதிகளை பாதுகாத்திட ‘சிங்கிள் டேக்’ அம்சம் உதவும். ஒரு அற்புதமான நிகழ்வின்போது கேமரா மோட் வைப்பதற்கு யோசித்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக விரைவாகவும் சிறப்பாகவும் அந்நிகழ்வுகளைப் பதிய சிங்கிள் டேக் அம்சம் உதவும். அந்த நிகழ்வு மற்றும் அங்குள்ள வெளிச்சத்துக்கு ஏற்ப உங்களால் அதிகப்பட்சமாக 7 புகைப்படங்கள் மற்றும் 3 வீடியோ பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

புதிய ‘குயிக் வீடியோ மோட்’ அம்சம் உள்ள சாம்சங் கேலக்ஸி A71 மற்றும் A51 போனில் கேமரா பொத்தானை நீண்ட நேரம் அழுத்தி வீடியோ பதிவிட முடியும். மேனுவல் முறையில் கேமரா அம்சத்திலிருந்து வீடியோ அம்சத்துக்கு மாற வேண்டிய வேலையில்லை.

அதிக தொலைவு கொண்ட புகைப்படத்தை கேமராவில் உள்ள ‘அல்ட்ரா வைட் நைட் மோட்’ அம்சம் எடுக்க உதவும். க்வாட் கேம் 5

MP மேக்ரோ கேம் அம்சம், உங்கள் புகைப்படத்துக்கான தெளிவையும் நேர்த்தியையும் கொடுக்கும். உங்கள் போன் மூலமாகவே சுவாரஸ்யம் நிறைந்த புகைப்படங்களை எடுக்க AR டூடுள் அம்சம் உதவும்.

அத்தனை வசதிகளும் நிறைந்த ஒரு ஸ்மார்ட்போனில் நீங்கள் எதிர்பார்க்கும் கேமரா வசதிகள் இந்த கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட் போன்களில் இடம் பெற்றுள்ளது. AI அம்சம் மூலம் உங்கள் புகைப்படங்களில் தேவையான மாற்றங்களை நீங்களே செய்து கொள்ளலாம். உங்களை அடுத்த சமுக வலைதள நட்சத்திரமாக மாற்றவும் உங்களது அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் A சீரிஸ் கேமரா பயனுள்ளதாக இருக்கும்.

அசத்தலான வடிவமைப்பு:

ஸ்மார்ட் போன்களின் தோற்றம் எப்போதுமே கவர்ச்சியாக இருக்க வேண்டும். சாம்சங் கேலக்ஸி A71 மற்றும் A51 போன்களின் தோற்ற வடிவமைப்பு இன்றைய இளைய தலைமுறையினரை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. கேலக்ஸி A சீரிஸ் போன் உடன் நீங்கள் வெளியில் சென்றால் பார்ப்பவர்களை திரும்பச் செய்யும் அழகிய வடிவமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. பெரிய திரை உடனான போன் என்பதால் கையில் பிடித்துக் கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும்.

சூப்பர் AMOLED ப்ளஸ் Infinity O டிஸ்ப்ளே உதவியால் சாம்சங் கேலக்ஸி A71 மற்றும் A51 போன்களின் டிஸ்ப்ளே திரை வண்ணமயமாகக் காட்சியளிக்கும். நீங்கள் வெளியில் பயணம் செய்யும் போது அதிக இடையூறு இன்றி உங்களால் திரையில் கவனம் செலுத்த முடியும்.

உங்களுக்குப் பிடித்தமான டிவி நிகழ்ச்சிகளை நீங்கள் பார்த்தாலும் அல்லது ஏதேனும் போனில் லசிக் கொண்டிருந்தாலும் Infinity-O டிஸ்ப்ளே தரும் மிகவும் பெரிய திரை அனுபவம் உங்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும். நிழல் காட்சி நிகழ் காட்சியாகத் தெரிய இந்த அதிதிறன் வாய்ந்த திரை உதவும்.

பேட்டரி:

ஸ்மார்ட் போன்கள் என்றாலே அதிதிறன் கொண்டதாகத்தான் இருக்கும். கூடுதலாக அதிகத் திறனையும் பயன்படுத்தும். உங்களது பணிகளை நீண்ட நேரம் மேற்கொள்ள உதவும் வகையில் சாம்சங் கேலக்ஸி A71 மற்றும் A51 சீரிஸ் போன்கள் அதிக நேரம் உழைக்கும் பேட்டரி அம்சத்துடன் உள்ளது. பணி, பள்ளி வேலை அல்லது விடுமுறைப் பயணங்கள், மொபைல் விளையாட்டு எதுவானாலும் பேட்டரி திறன் உங்களைக் கைவிடாது.

அது மட்டுமல்லாது சாம்சங் கேலக்ஸி A சீரிஸ் போன்கள் விரைவாகவே சார்ஜிங் செய்யும் வகையிலும் உள்ளன. அதனால் நீங்கள் குறைந்த நேரத்தில் உங்களது போனை சார்ஜ் செய்து கொள்ளலாம். பவர் அடாப்டர் கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய நீங்கள் மெனக்கெட வேண்டியதில்லை.

செயல்திறன்:

நமது அனைத்துத் தேவைகளுக்கும் ஸ்மார்ட் போன் அவசியமாகிறது. ஆனால், அந்த ஸ்மார்ட் போன் திறன் குறைந்தால் நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது. சாம்சங் கேலக்ஸி A71 மற்றும் A51 சீரிஸ் போன்களில் உள்ள மிகவும் திறன் நிறைந்த மொபைல் சிப்செட் நீங்கள் போனில் விரைவாக செயல்பட உதவும். இதன் மூலம் உங்களது அன்றாட வாழ்க்கை முறை இடையூறு இன்றி நகரும். உங்களது முக்கியப் பணிகள் முதல் மொபைல் விளையாட்டு வரை அத்தனைக்கும் ஏற்புடையதாக இருக்கும்.

samsung2

உங்கள் அனுபவத்தை மேலும் சிறப்பு செய்ய மிகவும் திறன் வாய்ந்த மென்பொருள் புத்தம் புதிய ஆண்ட்ராய்டு பதிப்புடன் இடம் பெற்றுள்ளது. எவ்வித தடங்களும் இன்றி உங்கள் பணி மென்மையாக நடைபெற UI உதவும். உங்களது பயன்பாட்டுக்கு ஏற்ற வகையிலான தகுந்த மென்பொருள் மற்றும் வெளிப்புறக் கட்டமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

கேம் பூஸ்டர் உடனான 6/8 ஜிபி உடனான ரேம் வசதி கொண்ட கேலக்ஸி A71 மற்றும் A51 சீரிஸ் போன்கள் உங்களைத் தொடர்ந்து விளையாடச் செய்யும்.

பாதுகாப்பு:

இன்றைய காலகட்டத்தில் பாதுகாப்பு மிகவும் அத்தியாவசியமானது. உங்களது சுய தகவல்களைப் பாதுகாக்கும் வகையில் சாம்சங் Knox பாதுகாப்பு வழங்கும். சாம்சங் கேலக்ஸி A71 மற்றும் A51 சீரிஸ் போன்களில் பாதுகாப்பு வசதியை Knox மேற்கொள்கிறது. உங்களது ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க பல அடுக்குகள் நிறைந்த பாதுகாப்புக் கவசம் உட்கட்டமைப்பாகவே கேலக்ஸி A சீரிஸ் போன்களில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பாதுகாப்புத் தரம் நிறைந்த Knox கவசத்துடனான சாம்சங் பே உங்களது பணம் பரிமாற்றத்துக்குப் பெரிதும் உதவும். எங்கு சென்றாலும் உங்களது கார்டை பயன்படுத்த உதவும். ஆக, உங்களது சாம்சங் கேலக்ஸி போன் மூலமாகவே உங்களுக்கு ஏற்ற தேவைகளை நிறைவேற்றலாம்.

altz

AltZLife-க்கு துணை செய்யும் சாம்சங் கேலக்ஸி A71 மற்றும் கேலக்ஸி A51:

இன்றைய புதிய அன்றாட வாழ்க்கை முறையில் உங்களது சுய விஷயங்களை தனிப்பட்டதாகவே வைத்துக் கொள்வது அவசியம். தனிப்பட்ட தேவைகளுக்கு உதவ சாம்சங் AltZLife உதவும். இதன் மூலம் உங்களது சுய தகவல்கள் பரிமாறப்படும் போது பாதுகாப்பானதாகவே இருக்கும்.

இரு உலகங்களுக்கும் ஏற்ற சிறந்த தேவையாக AltZLife இருக்கும். உங்களது போனில் உள்ள தரவுகள் உங்கள் போனிலேயே பாதுகாப்பாக இருக்க இந்த அம்சம் உதவும். உங்களது ஸ்மார் போனை மேம்படுத்த நினைத்தால் சிறந்த ஸ்மார்ட் போனாக இந்த போன்களே இருக்கும்.

 

Categories

Tech |