அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த அக்கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் 5 தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, உட்க்கட்சியின் பிரச்சனை, கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும், பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஒன்றரை மணி நேரமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் 5 தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. அவை
1.மக்களவை தேர்தலிலும், சட்ட பேரவை இடை தேர்தலிலும் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம் .
2.தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு உழைத்த கட்சி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்.
3.பிரதமரை வழி மொழியும் வாய்ப்பினை அதிமுகவுக்கு அளித்தமைக்கு மகிழ்ச்சியளிப்பதாக பாஜகவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்
4.நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை பெற உறுதியேற்று தீர்மானம் நிறைவேற்றம்
5.எம்ஜி ஆர், ஜெயலலிதா வழியில் அரசியல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள உறுதியேற்று தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
ஆனால் எதிர்பார்த்தது போல ஒற்றை தலைமை பற்றி எதுவும் பேசப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது