ஊரடங்கின் விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைத்ததால் நகராட்சி ஆணையர் கடைகளுக்கு சீல் வைத்து அபராதம் விதித்துள்ளார்.
கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவி வரும் காரணத்தினால் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா நகராட்சி ஆணையர் சதீஷ் குமார் முன்னிலையில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஊரடங்கின் விதிமுறைகளை மீறி 5 கடைகள் திறந்து வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்து கொண்டிருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அதிகாரிகள் 5 கடைகளையும் பூட்டி சீல் வைத்ததோடு, உரிமையாளர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது முன்கள பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உடனிருந்தனர்.