Categories
லைப் ஸ்டைல்

வீட்டைத் தூய்மையாக்க எளிய 5 வழிகள் ….!!

நாம் வசிக்கும் இருப்பிடத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதைப் பொருத்தே நம்முடைய உடல் நிலை, மன நிலை சீராக இருக்கும்.

களைத்துப் போட்ட துணிகள், மூளை முடுக்கெல்லாம் தூசிகள், ஒட்டடை படிந்த சுவர்கள் தூசி படிந்த அலமாரிகள், சாப்பாட்டு ஜாமான்கள் தவிர்த்து எல்லாம் இருக்கும் உணவு மேஜை இப்படியான வீட்டைப் பார்த்ததுமே சுத்தம் செய்ய மாபெரும் சலிப்பு உண்டாகும். இந்த வாரம், அடுத்த வாரம் என வீட்டை சுத்தம் செய்ய திட்டமிட்டு சோம்பேறித்தனப்பட்டு குப்பைகளுடனேயே வாழும் நபர்களும் உண்டு. நாம் வசிக்கும் இருப்பிடத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வதைப் பொருத்தே நம்முடைய உடல் நிலை, மன நிலை சீராக இருக்கும். அப்படியான  வசிப்பிடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள சில எளிய வழிகள் உள்ளது.

மைக்ரோவேவ் ஓவன்:

இருப்பதிலேயே சுத்தம் செய்யக் கடினமான பொருளாக மைக்ரோவேவ் ஓவன் தோன்றலாம். ஆனால், கொஞ்சம் வினிகர் மற்றும் தண்ணீர் வைத்து எளிதில் பளபளக்க வைக்கலாம். சேஃப் பவுலில் வினிகர் மற்றும் தண்ணீரை சரிசமமாக ஊற்றி உள்ளேயே பத்து நிமிடம் சுழல விடுங்கள். நீராவியாகும் அந்தக் கலவை ஓவனின் மூலை முடிக்கெல்லாம் பரவும். பின்பு எளிதாக உள்ளே துணியை வைத்து துடைத்து சுத்தம் செய்துவிடலாம். பவுலில் வேறு எந்தப் பொருளும் இல்லாமல் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

மூலைகள், முடுக்குகள்:

உங்களின் பழைய சாக்ஸ் இங்கு உங்களுக்கு கை கொடுக்கும். வினிகர் தண்ணீரை 50:50 என்கிற விகிதத்தில் கலந்து கொள்ளுங்கள். பின்பு சாக்ஸை கையில் அணிந்து கொண்டு வினிகர் தண்ணீர் கலவையில் நனைத்து எல்லா அழுக்குகளையும் சுலபமாக துடைத்துவிடலாம்.

தரைவிரிப்புகள், சோஃபா:

தரைவிரிப்புகளின் படிந்திருக்கும் பலநாள் கரை, சோஃபாவிலிருந்து வரும் வினோத வாடையுடன் கூடிய கரைகள் போன்றவற்றை அகற்றுவது கொஞ்சம் சிரமமாக இருக்கும். ஆனால், அதை சுலபமாக்க பேக்கிங் சோடா உங்களுக்கு உதவி செய்யும். கரைபடிந்த இடத்தில் பிரஷ் செய்துவிட்டு அதில் பேக்கிங் சோடாவைத் தூவுங்கள். 20 நிமிடங்களுக்குப் பிறகு அதைத் துடைத்தால் இருந்த கரை இறந்த கறையாகிவிடும்.

தூசியை ஒட்டி எடுங்கள்:

ஆம், ஒட்டிதான். மூலைகளில் படிந்திருக்கும் தூசிகள் சில நேரம் துடைத்தால் வராது. எனவே டபுள் சைட் டேப், டச் டேப் போன்றவற்றை ஒட்டி பிரித்தால் தூசிகள் மறையும்.

எண்ணெய்க் கரைகள்:

எவ்வளவு தேய்த்தாலும் டைல்ஸ், மார்பிள் மற்றும் மெட்டல்களில் படிந்த எண்ணெய்க் கரைகள் போகாமல் பிசுபிசுத்திருக்கும். எண்ணெயை எண்ணெயாலேயே எடுக்கலாம். காய்கறிகளுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் மற்றும் காகிதம் கொண்டு கரை படிந்த தளத்தை துடைக்கவும். பின்பு அந்த இடத்தை துணியால் துடைத்தால் கரைகள் மறையும்

Categories

Tech |