அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்கும் என்பது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக நிவர் மற்றும் புரெவி புயல் வந்து புரட்டிப்போட்டு சென்றன. ஆனால் என்னவோ இந்த இரண்டு புயலினால் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைத்துள்ளது. இதனால் ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது புரெவி புயல் கரையை கடந்த நிலையில், இதற்கு அடுத்தாற்போல் அடுத்தடுத்து ஐந்து புயல்கள் தமிழகத்தை தாக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன.
இதனால் மக்கள் கடும் அச்சத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் 5 புயல்கள் தமிழகத்தை அடுத்தடுத்து தாக்க இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியான வதந்தியை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். வானிலை மையம் வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்கள் மட்டுமே நம்ப வேண்டும். மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழை இருக்கும். புயல் வலுவிழந்து விட்டது. இதுபோன்ற வதந்திகளை கண்டு மக்கள் அஞ்ச வேண்டாம் என்றார்.