அமெரிக்க பெண்ணுடைய வீட்டின் பின்பகுதியில் அவரின் 2 மகள்கள் புதைக்கப்பட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டில் 32 வயது பெண்ணுடைய வீட்டின் பின்பகுதியில் அவரின் 2 மகள்கள் புதைக்கப்பட்டுஇருந்தனர். இந்த 2 மகள்களும் புதைக்கப்பட்டது தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதுகுறித்து காவல்துறையினர் கூறியபோது “மேரி சூ சிண்டர் என்ற பெண்ணை குழந்தைகளின் நலனுக்கு ஆபத்து மற்றும் சிறார்களை துன்புறுத்தல் வழக்கில் கைது செய்தோம். மேலும் அவரின் கணவர் எக்கோ பட்லர் என்பவரையும் கையும் களவுமாக பிடித்தோம். கடந்த மாதம் இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கியது. அப்போது மேரியின் 7 வயது மகன் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் இருந்த நிலையில் அது தொடர்பான புகாரில் அவர் வீட்டுக்குச் சென்றோம்.
அங்கு வீட்டில் இருந்தே மகன் படிப்பதாக மேரி கூறினார். அவரின் பேச்சு மற்றும் நடவடிக்கைகள் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இதனையடுத்து மேரியின் 2 மகள்களான நிகோல் எலிசபெத், ஜாஸ்மின் குறித்து அவரிடம் நாங்கள் கேட்டதற்கு சரியான பதில் கொடுக்கவில்லை. இந்த 2 மகள்களும் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக காணாமல் போனது எங்களுக்கு தெரியவந்தது. அதன்பின் மேரியின் வீட்டு பின்பக்கத்தில் சென்று நாங்கள் பார்த்தபோது மகள்கள் 2 பேரும் புதைக்கப்பட்டிருந்ததை பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். இதில் நிகோல் 2016-யிலும், ஜாஸ்மின் 2017-யிலும் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் எங்களுக்கு தெரியவந்தது. அவர்கள் இறந்த விதம், நோக்கம் மற்றும் அது தொடர்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களில் மேரியின் மகனுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இன்றி அவர் நலமாக இருக்கிறார்” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.