தமிழகத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக 5 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 லட்சத்து 79 ஆயிரத்து 191 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,529 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,140 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 852 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 245 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதுவரை 6 லட்சத்து 27 ஆயிரத்து 703 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 387 பேருக்கும், சேலத்தில் 244 பேருக்கும், செங்கல்பட்டில் 266 பேருக்கும், திருவள்ளூரில் 195 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.