Categories
கிரிக்கெட் விளையாட்டு

5-வது டெஸ்ட் : இந்திய அணி வீரர்களுக்கு ….கொரோனா தொற்று இல்லை…. வெளியான தகவல் …..!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கு கொரோனா  தொற்று பாதிப்பு உறுதியானதால் அவர்கள் அனைவரும்    தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் அணியின் உடற்பயிற்சியாளரான யோகிஷூக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் வீரர்களுக்கு தொற்று இல்லை என்ற  ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது . இதனால் இன்று போட்டி நடைபெறுவதில் எந்த சிக்கலும்  ஏற்படாது என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |