மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில்,ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது எனவும் ஆணையம் கூறி இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவ குழு ஐந்து முறை அப்பல்லோ வந்திருந்தாலும்,
ஜெயலலிதாவிற்கு எந்த மருத்துவ சிகிச்சையும் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டும் ஆணையத்தின் தரப்பில் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றன. ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறி இருந்த நிலையில், டிசம்பர் நான்காம் தேதியே இறந்தார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டதால் ஜெயலலிதாவின் உடைய மரணத்தை அறிவிப்பதில் திட்டமிட்டு தாமதம் செய்யப்பட்டதா ? என்கின்ற கேள்விகளும் எழுந்திருக்கிறது.
ஜெயலலிதா இறந்த நாள், இறந்த நேரத்தில் முரண்பாடு உள்ளதும் கூறப்பட்டிருக்கிறது. சாட்சியங்களின் அடிப்படையில் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 4-ஆம் தேதி மதியம் 3 முதல் 3:30 மணிக்குள், 2016 டிசம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்பல்லோ மருத்துவமனை அறிவித்திருந்ததையும் ஆணையத்தில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
2012 ல் மீண்டும் இணைந்த பிறகு ஜெயலலிதா – சசிகலா இடையே சுமுக உறவு இல்லை என்றும் ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுமூகமான உறவு இல்லாததால் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட இருந்த ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம் என்ற ஒரு சந்தேகத்திற்கு இடமான கேள்வியை ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.