5 வயது சிறுமியின் வயிற்றை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
சீனா கிழக்கு மாகாணமான ஷாண்டோங்கில் இருக்கும் ஜினான் குழந்தைகள் மருத்துவமனைக்கு சமீபத்தில் தனது 5 வயது மகளை பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு பொம்மைகளுடன் விளையாடியபோது சுமார் 190 காந்த மணிகளை அந்த சிறுமி விழுங்கி விட்டதாக மருத்துவரிடம் தாய் தெரிவித்துள்ளார்.இதைப் பற்றி முன்பே அறிந்திருந்தாலும் இறுதியில் வெளியேறிவிடும் என நினைத்துள்ளனர்.
அது மட்டுமில்லாமல் அந்த குழந்தைக்கு வலி ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலையில் காந்த மணிகளை விழுங்குவதால் ஏற்படும் ஆபத்து குறித்த வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பார்த்த பின்பு இவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் சிறுமியை எக்ஸ்ரே ஸ்கேன் செய்து பார்த்தபோது சிறுமியின் வயிற்றில் ஒரு பெரிய முட்டை போன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 190 காந்த குண்டுகள் இருந்துள்ளது. இதனை 2 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்பு மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்குமாறு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என எச்சரித்து இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.