ஆந்திராவில் விஷவாயு தாக்கி குழந்தை உட்பட 3 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை அடுத்த வெங்கடாபுரம் என்னும் கிராமத்தில் LG POLYMER என்ற தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக, இதுவரை ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென கிராமத்தை சூழ்ந்த புகை மூட்டத்தால் ஏற்பட்ட கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை அறிந்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கிட்டத்தட்ட 5 கிராம மக்களை அப்பகுதியை விட்டு வெளியேற்றி உள்ளனர். மேலும் இந்த ரசாயன வாயு கசிவு காரணமாக இதுவரை குழந்தை உட்பட மூன்று பேர் பலியாகியுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனுடைய பாதிப்பு எவ்வளவு நேரம் நீடிக்கும் என்ற அச்சமும் கிராம மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.