Categories
அரசியல் மாநில செய்திகள்

”அரசு இதை செஞ்சா”… வீட்டுக்கு 5 ஓட்டு… மொத்தம் 25 லட்சம் ஓட்டு…. பாஜககாரன் கூட DMKக்கு ஓட்டு போடுவான்: கணக்கு போட்ட தமிழக கம்யூனிஸ்ட்கள்..!!

தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதனை தொடக்கி வைத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,  எந்தெந்த கோவில்களுக்கு நிலங்கள் எல்லாம் சொந்தமாக இருக்கிறதோ, அந்த கோவிலில் இருக்கின்ற சாமிக்கு உண்மையிலேயே சக்தி இருக்கு என  வச்சுக்கோங்களேன்…  நாம கதற கதறலை பார்த்து அந்த சாமியே இறக்கப்பட்டு நமக்கு பட்டா கொடுத்தாலும்,  கொடுத்து இருக்கும்.

இப்ப என்ன சொல்றாங்க என்றால் ? ஒரு செண்டு நிலத்தை கூட நீ எடுக்கக் கூடாது. ஒரு செண்டு நிலத்தை கூட யாருக்கும் பட்டா கொடுக்கக் கூடாது.  பட்டா கொடுக்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு நீதிபதிக்கு என்ன அருகதை  இருக்கிறது ? நீதிபதிக்கு என்ன உரிமை இருக்கிறது ? அரசாங்கம் கொள்கை ரீதியாக முடிவெடுத்தால், அரசு அதை செயல்படுத்தக் கூடாதா ? போற போக்கை பாத்தா நீதிமன்றம் எதிலெல்லாம் தலையிடும்னு சொல்ல முடியாது.

நாம தலையை கருப்பா வச்சிருக்கனுமா ?  வெள்ளையா வச்சுக்கணுமா ? அதுக்கு ஒரு வழக்கு போட்டாலும் வச்சுக்கோ, ஒருவேளை நீதிமன்றம் அதையும் சொன்னாலும், சொல்லலாம். எல்லாரும் வெள்ளையா தான் வச்சுக்கணும்னு நீமன்றம் சொன்னா என்ன பண்ணுவீங்க ? எதுக்கு வேணாலும் நீதிமன்றம்,  எதுக்குவேனும்னாலும் நீதிபதி… எனவே நான் என்ன கேட்கிறேன் என்றால் ? இன்றைக்கு நாம் குடியிருக்க கூடிய இடங்களுக்கு பட்டா கிடைக்க வேண்டும் என்றால்,  நாம் முதலில் போராட வேண்டியது சென்னை உயர் நீதிமன்றத்தை எதிர்த்து தான் நம்முடைய போராட்டத்தை கூர்முனையாக நடத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை உங்களுக்கு நான் சொல்லுறேன்.

நீங்க என்ன சொல்றது ? இன்னைக்கு அரசாங்கம் தங்கள் கையில் இருக்கின்ற அதிகாரத்தை பயன்படுத்தி,  கோவில் நிலங்களில் குடியிருக்கிற  யார் யார் இருக்கிறார்களோ,  அவர்களுக்கெல்லாம் இந்த தேதியில் இருந்து இடம் சொந்தம் என நீங்க அறிவிச்சா ? என்ன நாடு குடிமூழ்கி விட போகுது. உங்களுக்கு தான் அது  நல்ல பேரு. அஞ்சு லட்சம் குடும்பம் இருக்கு. ஒரு குடும்பத்துக்கு அஞ்சு பேர் வச்சா கூட, 25 லட்சம் ஓட்டு. சாதாரண விஷயமா இது. நீங்க அப்படி ஒரு அறிவிப்பை அறிவித்தா ? பிஜேபிகாரன் கூட உங்களுக்கு தான் ஓட்டு போடுவாரு, பரவாயில்லையே நமக்கு பட்டா கொடுத்தது இவர்தான்னு என தெரிவித்தார்.

Categories

Tech |