Categories
உலக செய்திகள்

“தலீபான்களுக்கு பயந்து பிரிட்டன் வந்த குடும்பம்!”.. ஓட்டலில் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்..!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு பயந்து பிரிட்டனுக்கு தப்பிவந்த 5 வயது சிறுவன் ஓட்டலின் 9-வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிட்டது. எனவே, நாட்டு மக்கள் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். இந்நிலையில் 5 வயதுடைய சிறுவன், தன் குடும்பத்தினருடன் ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து தப்பி பிரிட்டனுக்கு வந்துள்ளார்.

அங்கு, தெற்கு யார்க்ஷயர் பகுதியில் ஷெஃபீல்ட் பெருநகரத்தின் ஓட்டலில் தங்கியுள்ளனர். அப்போது, நேற்று அந்த சிறுவன் எதிர்பாராமல், 9 வது மாடியின் ஜன்னல் வழியே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம், மொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இச்சிறுவனின் குடும்பத்தினர் ஆப்கானிஸ்தானின் பிரிட்டன் ராணுவத்துடனும், அதிகாரிகளுடனும் சேர்ந்து பணியாற்றி வந்திருக்கிறார்கள்.

தற்போது தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால், அவர்கள் பிரிட்டனுக்கே வந்துவிட்டனர். சிறுவன் மரணம் தொடர்பில், விசாரணை நடத்தப்பட்டதில், 9-வது மாடியின் ஜன்னலில் இருந்த இடைவெளி வழியே சிறுவன் தவறி விழுந்தது உறுதியானது. மரணத்தில் சந்தேகம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |